108 AWU TN COITU logo 108 AWU TN COITU

108 AWU TN COITU

by Kribs

🗂️ Social

🆓 free

4.9/5 ( 990+ reviews)
Android application 108 AWU TN COITU screenshort

Features 108 AWU TN COITU

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ‘அவசர உதவி’ என்றால் 108 என்று ஆக்கியது நமது உழைப்பு தான்.
பலருக்கு அவசர காலத்தில் உயிர் கொடுத்த நம்முடைய கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்றால் சங்கமாக அணிதிரண்டு , பல போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும்.
நமது சக தொழிலாளி பணியில் இருந்து நீக்கப்படுகிறார் என்பதை நாம் தட்டி கேட்காமல் இருந்தால் நாளை நாம் பணியில் இருந்து நீக்கப்படுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி ஒட்டுவேலை பார்ப்பதால் நிர்வாகம் உங்களுக்கு சலுகைகள் காட்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்றால் அது தான் மிகப்பெரிய முட்டாள் தனமாக இருக்கும்.
நிர்வாகம் உங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தி கொண்டு தூக்கி எறிந்துவிடும்.
ஆத்தோடு சக தொழிலாளியின் வாழ்க்கையை கெடுத்தவர் என்ற மிகப்பெரிய குற்ற உணர்வும் உண்டாகும்.
நமது பலமே நம்மிடம் உள்ள ஒற்றுமைதான் என்பதை நாம் திரும்ப திரும்ப நினைவில் கொள்வோம்.
நமது ஒற்றுமையின் மூலமே நமக்கான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.இந்த சங்கத்தின் முன்னுள்ள அடிப்படையான கோரிக்கைகள்:1.
பணியிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் தக்க இழப்பீடு , சர்வீஸ் தொடர்ச்சியுடன் பணியில் அமர்த்த வேண்டும்.2.
வேலை நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாகவும் , நாள் ஒன்றுக்கு மூன்று சிப்டுகளாக மாற்ற வேண்டும்.3.
8 மணி நேரத்திற்கு மேல் செய்யும் வேலைக்கு ஓவர் டைம் கொடுத்து இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.4.
ஒரு ஆம்புலன்சுக்கு 3 ஓட்டுனர்கள் என்ற பழைய முறையை அமல்படுத்த வேண்டும்.5.
தொழிலாளர்களை சொந்த மாவட்டத்தில்,சொந்த ஊரில் பணியில் அமர்த்த வேண்டும்.6.
வேலையில் சேரும் பொது ஒப்புக்கொண்டபடி சம்பள உயர்வு அளிக்க வேண்டும் .7.தொழிலாளர்களுக்கு ஓய்வறை, மற்றும் உள்ள பணிசலுகைகளை அளிக்க வேண்டும்.8.
பணி நிரந்தரச்சட்டப்படி இரண்டு வருடத்திற்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.9.தொழிலாளர் சட்டங்களை மதித்து தொழிலாளர்களை மரியாதையோடு நடத்த வேண்டும்.10.
சி.எல்.
மற்றும் மருத்துவ விடுப்பு ஆகியவற்றை முறையாக அளிக்க வேண்டும்.11.தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் க்ரூப் இன்சூரன்ஸ் செய்யப்பட வேண்டும்.12.
பி.எப் , இ.எஸ்.ஐ ஆகியவற்றை முறைப்படி பிடித்தம் செய்து ,நிர்வாகம் தனது பங்கை சரியாக செலுத்த வேண்டும்.13.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை தொட்டு தூக்குதல்,மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பதால் தொழிலாளர்களுக்கு கிரிமி தொற்றின் மூலம் வரக்கூடிய பாதிப்புகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், உரிய தற்காப்பு மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும்ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றவும், நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தவும் வலுவானபோராட்டத்தை மேற்கொள்ள நாம் 108 ஆம்புலன்ஸ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ந்து சங்கத்தை பலப்படுத்தும் வேலையை செய்வோம் .
நமது கோரிக்கைகளை நிறைவேற்றக்குரல் கொடுப்போம்.இந்த சங்கமானது நமக்கு தோழனாக பாதுகாவலனாக இருக்கும் இந்த சங்கத்தின் வளர்ச்சியானது நமது வளர்ச்சியாக இருக்கும்.சங்கமாக ஒன்றிணைவோம் கோரிக்கைகளை வென்றெடுப்போம்.108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினாராவோம்!தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் வாழ்க!

Secure & Private

Your data is protected with industry-leading security protocols.

24/7 Support

Our dedicated support team is always ready to help you.

Personalization

Customize the app to match your preferences and workflow.

Screenshots

See the 108 AWU TN COITU in Action

108 AWU TN COITU Screen 1
108 AWU TN COITU Screen 2
108 AWU TN COITU Screen 3
108 AWU TN COITU Screen 4

Get the App Today

Download on Google Play

Available for Android 8.0 and above